சிங்கம்புணரி : சிங்கம்புணரி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். எஸ்.வி.மங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுவாமி வீதி உலா நடந்தது. காலையில் திருவெம்பாவை பாடப்பட்டது.