பதிவு செய்த நாள்
03
ஜன
2018
02:01
திருக்கோவிலுார்: விழுப்புரம் மாவட்டம், முழுவதும் உள்ள கோவில்களில், நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ நேற்று காலை 8:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் உட்பிரகாரத்தில், சுந்தரர் துாது செல்லும் திருவூடல் உற்சவம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடராஜருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. பின்னர் தமிழ் வேதவார வழிபாட்டுக் குழுவினர், திருவெம்பாவை வாசிக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மாடவீதியில் கோட்டை நடனமிடும் நிகழ்ச்சியும், நடராஜர் சுவாமிகள் வீதியுலா நடந்தது.
சங்கராபுரம்: தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவிற்கு பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள், கணபதி முன்னிலையில் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நடராஜ சுவாமிக்கு, நேற்று காலை சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.
பாணாம்பட்டு: விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு காமாட்சி அம்பாள் சமேதராய், வேதபுரீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7:30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, உற்சவர்கள் சிவன், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
வானுார்: உப்புவேலுார் கிராமத்தில் உள்ள திருமுகேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சமேத சிதம்பரேஸ்வரர் கோவி லில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு மார்கழி சிறப்பு பூஜைகள் நடத்தி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, ருத்ர மந்திரங்களை வாசித்து, பூஜைகள் நடந்தது. சிவனடியார்கள் சிவபுராணம் பாடியபின் திரை நீக்கி ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதேபோல் நீலமங்க லம் செம்பொற்சோதிநாதர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.