பதிவு செய்த நாள்
03
ஜன
2018
02:01
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா, கடந்த, 25ல், நடராஜர் ரக்சா பந்தனம் மற்றும் மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகம், 10:30 மணிக்கு சுவாமி தரிசனம், தொடர்ந்து, உற்சவரின் திருவீதி உலா நடந்தது.
*கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் பகுதியில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது. முன்னதாக நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. பின்னர் கோவில் பிரகாரத்தில் நடராஜர், சிவாகமி அம்மன் திருவீதி உலா நடந்தது.
* சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை நடராஜருக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலையில், நடராஜர், அம்மன் திருவீதி உலா நடந்தது.