பெரியகுளம்: ராம நாமம் சொல்லும் நாள் அனைத்தும் நல்லநாட்களே, என, பெரியகுளத்தில் நடந்த கூட்டுப்பிரார்த்தனையில் முரளீதரசுவாமி பேசினார்.பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில்உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை நடந்தது. கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜை செய்த முரளீதரசுவாமி பேசியதாவது: ராம நாமம் சொல்லும் நாள் அனைத்து நல்ல நாட்களே.இது திருப்பாவையில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.நாம் அனைவரும் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்றமகாமந்திர கீர்த்தனையை கூறிவந்தால் எல்லா நன்மைகளும் பெறுவோம் ,என்றார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிருஷ்ண சைதன்யதாஸ் , பக்தர்கள் செய்திருந்தனர்.