பதிவு செய்த நாள்
04
ஜன
2018
03:01
அனுப்பர்பாளையம்:அவிநாசி அருகே அம்மாபாளையத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் கோவில் விழாவில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இக்கோவிலில், பொங்கல் திருவிழா, 26ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. விழாவில், நேற்று காலை 7:00 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.மாலை 4:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள் இழுத்தனர். தேர், அம்மாபாளையம் வீதிகள் வழியாக சென்று மீண்டும், கோவிலை வந்தடைந்தது. இரவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், இன்று, மதியம் 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அம்மாபாளையம் ஊர் பொது மக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் செய்துள்ளனர்.