பதிவு செய்த நாள்
04
ஜன
2018
03:01
திருப்பூர்: வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில், அய்யன்குருபூஜை விழா மற்றும் திருவாதிரை திருவிழா நடந்தது.பல்லடம் தாலுகா, அய்யம் பாளையத்தில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன்கோவில், பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், 1ம் தேதி இரவு, பொங்கல் விழா நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், அய்யனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர்.மாலை, 6:00 மணிக்கு, காவடிக்குழுவினரின் காவடியாட்டம், ஒயிலாட்ட நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு பெண் கள் பங்கேற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சியும் நடந் தது. நேற்று முன்தினம் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவகாமியம்மை சமேத நடராஜ பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அய்யன் குருபூஜைவழிபாடு நிறைவையொட்டி, நேற்றிரவு, 7:31 மணிக்கு, வாழைத்தோட்டத்து அய்யன், சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள, நாதஸ்வர இன்னிசையுடன் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.· தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில், மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவில், காங்கயம், பழைய கோட்டை ரோடு காசி விஸ்வநாதர் கோவில், அகிாண்டபுரம் அகிலாண்டீஸ்வரர், மருதுறை பட்டீஸ்வரர், நத்தக்காடையூர் ஜெயம்கொண்டீஸ்வரர், மடவிளாகம் ஆருத் திரா கபாலீஸ்வரர் கோவில்களில், நடராஜர் - சிவகாமியம்மனுக்கு பல்வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தம்பதி சமேதரராக எழுந்தருளி, திருவீதி யுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.