பதிவு செய்த நாள்
20
டிச
2011
11:12
தேனி : குச்சனூர் சனிப்பெயர்ச்சி விழாவை தொடர்ந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குச்சனூர் சனிபகவான் கோயிலில், வரும் புதன் கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. குச்சனூரில் இருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டிலும், கூழையனூர் செல்லும் ரோட்டிலும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு வசதியாக கோயில் பெரிய திரையில் தீபாராத நிகழ்ச்சி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், தேனி, போடி, சின்னமனூரில் இருந்து குச்சனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சின்னமனூர், உத்தமபாளையம் வழியாக செல்லும் பஸ்கள் சங்கராபுரம் அருகிலும், தேனியில் இருந்து கூழையனூர் வழியாக செல்லும் பஸ்களுக்கு குச்சனூர் அரசு பள்ளி அருகிலும் தனித்தனி பஸ்ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள் தீப்பிடிக்காத சீட்களில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் குளிக்கும் இடத்தில் மின்விளக்கு வசதி, கோயில் அருகில் பக்தர்களுக்கு மருத்துவ வசதி, 108 ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளிப்பகுதியில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. பக்தர்களுக்கு உதவி செய்யவும், தேவையான தகவல் வழங்கவும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 04546- 321108 என்ற போன் எண் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் போன் மூலம் தகவல்கள் பெறலாம்.