சபரிமலை: சபரிமலை ஐயப்பனின் தாலாட்டு பாடலான ஹரிவராசனம், பிப்ரவரியில் மறு ஒலிப்பதிவு செய்யப்படும், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். ஹரிவராசனம் பாடலில் சில பிழைகள் உள்ளது. நேரம் வரும் போது அதை திருத்தி பாடுவேன். அப்பாடலில் வரும் அருவி மர்த்தனம் என்ற வார்த்தை அரி விமர்தனம் என பாடப்பட வேண்டும், என கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும், பாடலின் ஒவ்வொரு வரியிலும் சுவாமி என்ற வார்த்தை வரவேண்டும்; மறு ஒலிப்பதிவில் இது சேர்க்கப்படும், என தேவசம்போர்டு தலைவர் பத்மகுமாரும் தெரிவித்தார். சுவாமி ஐயப்பன் சினிமாவுக்காக இப்பாடலை உருவாக்கிய அமைப்பு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், பாடலை ஜேசுதாஸ் திருத்தி பாடிவிட்டதாக சமூக வலைத்தளங்களில், ஹரிவராசனம் பரவிவரு கிறது. ஆனால், இதை தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மறுத்துள்ளார். பரவி வரும் பாடல் ஜேசுதாஸ் கச்சேரியில் பாடியது. பிப்., 12-க்கு பின் பாடலை மறு ஒலிப்பதிவு செய்யலாம் என ஜேசுதாஸ் கூறியுள்ளார், என பத்மகுமார் கூறினார்.