பதிவு செய்த நாள்
06
ஜன
2018
12:01
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபி?ஷகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை, 7:00 மணிக்கு மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. 11:00 மணிக்கு, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. எஸ்.வி., ரோடு, கடைவீதி, மகாத்மா காந்திசாலை, வெளிபேட்டை தெரு வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, உற்சவ விநாயகர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் சிவசுப்பிரமணியம் செய்திருந்தார். இதேபோல், கடைவீதி சித்தி விநாயகர் கேவில், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், நெசவாளர்காலனி சக்தி விநாயகர் கோவில், பாலக்கோடு பால் வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.