பதிவு செய்த நாள்
06
ஜன
2018
12:01
சபரிமலை: மகரஜோதி காணவரும் பக்தர்களை கருத்தில் கொண்டு சென்னை- திருவனந்தபுரம் இடையே மதுரை வழியாக, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 12- ம் தேதி காலை 7:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் அன்று இரவு 11:50 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேளி ரயில் நிலையத்தை வந்தடையும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், இரணியல், குழித்துறை, திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். ஆனால் மறுமார்க்கத்தில் இந்த ரயில் மதுரை வழி செல்லாமல், கோவை வழியே சென்னை சென்ட்ரல் செல்கிறது. கொச்சுவேளியில் இருந்து 14-ம் தேதி இரவு 11:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கன்னுார், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், ஒற்றப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியே மறுநாள் மாலை 5:25 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயிலில் 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.