பதிவு செய்த நாள்
08
ஜன
2018
02:01
ஈரோடு: சமய வகுப்பு மாணவர்கள் மாநாட்டை முன்னிட்டு, பஜனை ஊர்வலம் நடந்தது. ஈரோடு மாவட்ட ஹிந்து தர்ம வித்யா பீடம், 10ம் ஆண்டு, சமய வகுப்பு மாணவர் மாநாடு, கருங்கல்பாளையத்தில் நடந்தது. முன்னதாக பஜனை ஊர்வலம் நடந்தது. இதில் சமய வகுப்பு மாணவர்கள், கிருஷ்ணன், ராதை, கண்ணன் வேடத்திலும், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி ஆகிய மகான்கள் வேடமிட்டும் கலந்து கொண்டனர். வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீடம் அமைப்பு செயலாளர் ஸ்வாமி சிவாத்மானந்த, ஆசி வழங்கி பேசினர். அதைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சி, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. சமய வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற வர்களுக்கு சான்றிதழ், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.