பதிவு செய்த நாள்
08
ஜன
2018
05:01
மேட்டூர்: நீர்மட்டம், 56.47 அடியாக சரிந்ததால், மேட்டூர் அணை நீருக்குள் மூழ்கியிருந்த, நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது. மேட்டூர் அணை, பண்ணவாடி நீர்பரப்பு பகுதி, ஜலகண்டேஸ்வரன் கோயிலில், 18 அடி உயர நந்தி சிலை உள்ளது. அணை நீர்மட்டம், 67 அடியாக உயரும் போது, நந்தி சிலை முழுமையாக நீரில் மூழ்கி விடும். ஒரு மாதத்திற்கு முன் வரை நந்தி சிலை நீருக்குள் மூழ்கியிருந்தது. டெல்டா பாசனத்திற்கு நீர்திறந்ததால் டிசம்பர், 13ல், 79 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 28 ல், 67 அடியாக சரிந்ததால், நந்தி சிலை தலை மட்டும் நீருக்கு வெளியே தெரிந்தது. இன்று நீர்மட்டம், 56.47 அடியாக சரிந்ததால், நந்தி சிலை முழுமையாக நீருக்கு வெளியே தெரிந்தது. அதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.