பதிவு செய்த நாள்
09
ஜன
2018
11:01
பல்லடம் :ஏழு ஊர் பொதுமக்கள் சார்பாக, தெற்குபாளையம் மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பல்லடத்தை அடுத்த தெற்குபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில், நாரணாபுரம், தெற்குபாளையம், ராசாக்கவுண்டம்பாளையம், மாணிக்காபுரம், கல்லம்பாளையம், ராயர்பாளையம் மற்றும் அம்மாபாளையம் ஆகிய ஏழு ஊரை சேர்ந்தவர்களுக்கு குல தெய்வமாக உள்ளது. இந்நிலையில், ேகாவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா, இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.முன்னதாக, 7ம் தேதி காலை, 5.00 மணிக்கு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், கம்பம் நடுதல் நடைபெற்றது.மாலை, 6.00 மணிக்கு, இளைஞர்களின் காவடி ஆட்டத்துடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று, மாரியம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.