பதிவு செய்த நாள்
09
ஜன
2018
11:01
உடுமலை:உடுமலை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெற்றது.உடுமலை, பெரியகடை வீதி, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, பகல்பத்து, ராபத்து உற்சவம் நடந்தது.ராபத்து உற்சவத்தின் இறுதி நாளில், நம்மாழ்வார் மோட்சம், நிகழ்ச்சி நடந்தது. காலை, 9:00 மணிக்கு நம்மாழ்வார், கோவில் வளாகத்தை சுற்றி, பரமபத வாசல் வழியே, மீண்டும் நுழைந்து, பூமீநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளின் திருவடிகளை சரணடைந்தார். சிறப்பு அலங்காரத்துடன் பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.நம்மாழ்வார் மோட்சம் உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.