பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன., 13ல், அஷ்டலட்சுமி கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.பெசன்ட் நகரில், அஷ்டலட்சுமி கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிப்பீடம், 64 கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அஷ்டாங்க விமானம் எனும் பழமையான பெருமாள் கோவில்களுக்கு உரிய இரட்டை அடுக்கு முறையில், விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது. பஞ்சாட்சர ஆகம பூஜைகள் நடக்கும் இக்கோவிலில், திருமால், லட்சுமியுடன் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். அஷ்ட லட்சுமிகளும் ஒருங்கிணைந்து, திருமாலின், 10 அவதாரங்களும் தனியாக ஒரே சன்னதியில் காட்சி அளிக்கின்றன. இக்கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன., 13ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஜன., 14, 16ம் தேதிகளில், சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.