மதுரை : மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் அனுப்பானடி நடராஜர் சுவாமி கோயிலில் திருவாதிரை விழா நடந்தது. வேள்வி பூஜை, 16 வகையான மகா அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நிர்வாகி ராஜமாணிக்கம் ஒருங்கிணைத்தார். இதைதொடர்ந்து இம்மையில் நன்மை தருவார் கோயிலில் நடந்த சன்மார்க்க பக்த சபை வழிபாட்டு கூட்டத்தில் ஆடிட்டர் ஜவஹர்லால் பேசினார். சுப்பிரமணியம், ராமநாதன், மோகன், கிருஷ்ணன், ஜெகநாதன், காளிதாசன், விஜயலட்சுமி, கிரிஜா, ஜோதி பங்கேற்றனர்.