பதிவு செய்த நாள்
21
டிச
2011
10:12
காரைக்கால்: கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இன்று காலையில் இடம்பெயர்ந்தார். இதனை முன்னிட்டு திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலையில் சனி பகவான் இடம் பெயர்ந்ததும் லட்சக்கனக்கானோர் இங்குள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். இந்த நிகழ்ச்சியை தினமலர் இணையதளம் நேரிடையாக வெப்காமிரா மூலம் ஒளிபரப்பு செய்தது. இதன்மூலம் வெளி நாட்டு வாழ் பக்தர்கள் பெரும் பயன் அடைந்ததாக மெயில் தினமலருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளனர். திருநள்ளாறில் பிரசித்த பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகாவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா மிகவும் பிரிசித்தி பெற்றது. இந்த ஆண்டு கண்ணி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். இவ்விழா இன்று காலை சரியாக 7.51 மணிக்கு இடம் பெயர்ந்தது. முன்னதாக அதிகாலை 3 மணி முதல் சனி பகவானுக்கு பால், நல்லலெண்ணை, பழங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடந்து வந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோஷம் முழங்க சனி பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.
இரவு முதல் குவிந்த பக்தர்கள் கூட்டம்: திருநள்ளாறு சனி பகவானை தரிசிக்க நேற்று இரவு முதல் பொதுமக்கள் வரத்துவங்கினர். அதிகாலை வரை கூட்டம் வந்து கொண்டிருந்தனர். இன்று காலை வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சரியாக 7.51 சனி பெயர்ச்சியை முன்னிட்டு தீபாரணை நடந்தது.
பனியிலும் குழந்தைகளுடன் தரிசனம்: மார்கழி மாதத்தில் கடும் பனி நிலவி வரும் நிலையில் சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்று சனி பகாவானை தரிசிக்க வந்த பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளோடு தரிசனத்திற்கு வந்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் நலன் குளம்: சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வந்த பக்கதர்கள் முன்னதாக நள குளத்தில் தங்களது ÷õதஷங்களை கழித்த நல்லெண்ணெய் தேர்த்து நீராடி தங்களது பழைய ஆடைகளை குளத்தில் விட்டு சென்றனர். நேற்று அதிகாலை முதலே சுமார் 2 லட்சம் பக்தர்கள் குளத்தில் நீராடியதால் அப்பகுதியே பக்தர்கள் வெள்ளத்தால் மூழ்கியது.திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுகுதிகளில் இருந்து நேற்று இரவு முதலே வாகனங்களில் வரத்துவங்கினர் இதனால் அப்பகுதியில் எல்லையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு 4 கிலோ மீட்டர் நடத்தே சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மூட்டை மூட்டையாக குவிந்த ஆடைகள்: சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் நள குளத்தில் நீராடி கழற்றி விடப்பட்ட ஆடைகள் மூட்டை மூட்டையாக குவிந்தது. அதனை தொடர்ந்து ஊழியர்கள் அவ்வப்போது அகற்றி வந்தனர். சனி பெயர்ச்சி விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரியில் இருந்து2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கவர்னர் தரிசனம்: இன்று காலை நடந்த சனி பெயர்ச்சி விழாவில் புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது.