Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூரில் சுவாமி அய்யப்பர் ... 6 ஆண்டாக பூட்டிக்கிடந்த மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2011
10:12

தஞ்சாவூர்: திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. நவகிரகங்களில் முக்கிய கிரகமான சனிபகவான் ஈஸ்வரப் பட்டம் பெற்று சனீஸ்வரன் என்றழைக்கப்படுகிறார். இந்த சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றோரு ராசிக்கு பெயர்ச்சி அடைவதை சனிப்பெயர்ச்சி விழாவாக கோவில்களில் கொண்டாப்படுகிறது.இவ்வாண்டில் இன்று 21ம் தேதி காலை 7.24 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு அர்ச்சனைகளும் பரிகார ஹோமங்களும் நடக்கிறது. மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிதாரர்கள் பரிகாரம் செய்து கொள்வது முக்கியம். சிறப்பு அர்ச்சனை காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரையும், மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரை இன்று 21ம் தேதி ஒரு நாள் மட்டுமே நடக்கின்றது. நேரில் வருபவர்கள் கட்டணம் செலுத்தி சிறப்பு அர்ச்னை மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெறலாம். நேரில் வர முடியாதவர்கள் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டால் பரிகாரம் செய்து தபால் மூலம் பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். சிறப்பு அர்ச்சனைக்கு ரூபாய் 50, பரிகார ஹோமத்துக்கு ரூபாய் 250 மணி ஆர்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்து தஞ்சையில் மாற்றத்தக்க வகையில், நிர்வாக அதிகாரி, அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில், திட்டை, தஞ்சை மாவட்டம் 613003 என்ற முகவரிக்கு, தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி ஆகிய விபரங்களை சரியான முகவரியுடன் அனுப்பினால், அவர்களுக்கு அர்ச்சனை பரிகார ஹோமத்தில் சங்கல்பம் செய்து தபால் மூலம் பிரசாம் அனுப்பி வைக்கப்படும். சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜு, தக்கார் ஜெயபால் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில்  கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.வடக்கே காசி ... மேலும்
 
temple news
 லக்னோ; ராம நவமியான நேற்று, அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் பட்டு ... மேலும்
 
temple news
 சிருங்கேரி,; சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளின் 75வது ஜன்மதின விழா சமீபத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று சுவாமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடையில் சீரமைக்கப்பட்ட, ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம், 9ம் தேதி நடைபெற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar