பதிவு செய்த நாள்
15
ஜன
2018
12:01
தேனி:தை முதல் நாளான நேற்று பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு ஆராதனை அபிஷேகங்கள் நடந்தன. உததமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை சுவாமி முழு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. குருவப்ப பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கைலாசபட்டி, கைலாசநாதர் மலைக் கோயிலில் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கிருஷ்ணன் கோயிலில் பாலகன் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஷீரடி சாய்பாபா கோயிலில் அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரியளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
* பிச்சாங்கரை மலைப்பகுதியில் கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் நடந்தன. சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார்.
* போடி கீழச்சொக்கநாதர் கோயில், பரமசிவன் மலைக்கோயில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சுற்றினர். போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. கூடலுார்: வீருசிக்கம்மாள் கோயிலில் பொங்கல் விழாவில் பக்தர்கள் கரும்புகளை ஏந்தி ஊர்வலமாக சென்று, கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். கூடலுார் சீலைய சிவன் கோயிலில் சிவனுக்கு அலங்காரமும், கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சாமிக்கு மலர் அலங்காரத்தில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது.