தேவிபட்டினம்:தேவிபட்டினம் அருகே ஆற்றாங்கரை உஜ்ஜயினி மகா காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்கான விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அழகன்குளம் அழகிய நாயகியம்மன் மகளிர்மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமா ரத்தினம் லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை, மாங்கல்ய பூஜை, சக்தி ஸ்தோத்திரம் உள்ளிட்டவைகளைசெய்து பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி காளியம்மாள் செய்திருந்தார். விளக்கு பூஜையை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.