Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த ... முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோவில் திருவிழா முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல்
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல்

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
10:01

சிவகங்கை: தை முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் நடந்தது. இதற்காக, இப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார் பெயர்களை சீட்டில் எழுதி பானையில் குலுக்கி ஒரு குடும்பத்தினரை தேர்வு செய்தனர். இந்த ஆண்டு சிவசுப்ரமணியன் குடும்பத்தார் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை 5:00 மணிக்கு நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன் முதல் நபராக பெரிய மண்பானையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து 910 நகரத்தார்கள் மற்றும் மற்ற சமூகத்தினரும் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைத்தனர். வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்பட்டது. தொடர்ந்து கண்ணுடைய நாயகி அம்மனுக்கு கிடா வெட்டி, அபிஷேகம் செய்தனர். ரஷ்யா, பிரான்ஸ் நாட்டினர் பங்கேற்றனர். வரன் தேடும் படலம்: நாட்டரசன்கோட்டை பகுதி நகரத்தார்கள் தொழில், கல்வி போன்ற காரணங்களுக்காக வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். பொங்கல் விழாவில் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதால், வரன் தேடும் படலமும் நடந்தது.

பாகனேரி செவ்வாய் பொங்கல்: பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் முன் நகரத்தார் செவ்வாய் பொங்கல் வைத்தனர். நேற்று மாலை 4:31 மணிக்கு 510 நகரத்தார்களும் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். அனைவரது பொங்கல் பானைக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாதவன் குடும்பத்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது.சுற்றுலா, பேரூராட்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் வெளிநாட்டினரை அழைத்து வருவது, பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற சிறப்பு ஏற்பாடு இருக்கும். இந்த ஆண்டு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நகரத்தார்களே வெளிநாட்டினரை அழைத்து வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar