பதிவு செய்த நாள்
22
டிச
2011
12:12
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பல கோயில்களில் சனிபெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு, மகாசாந்தி மற்றும் பரிகார ஹோமம் நடந்தது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பகல் 2 முதல் மாலை 4 மணி வரை கணபதி துர்கா நவக்கிர சனீஸ்வரர் ஹோமத்துடன் 30 ஆயிரம் சிறப்பு அர்ச்சனை நடந்தது. மாலை 4 முதல் இரவு 9 மணி வரை இலவச மகாசாந்தி வழங்கப்பட்டது. உலக நன்மைக்காக கூட்டு வழிபாடும், ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. சனி பகவானுக்கு 11 அபிஷேகங்களுடன் அலங்கார நெய்வேத்யம் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சீனிவாச சாஸ்திரி, ராஜலெட்சுமி மற்றும் கோயில் டிரஸ்டி கணேசன் செய்திருந்தனர். ராமநாதபுரம் முகவை ஊரணி வடகரை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம், மகா கணபதி, துர்க்கா, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. ராமநாதபுரம் முத்துராமலிங்க சுவாமி கோயில், ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் அரண்மனை சொக்கநாதர் கோயில்களில் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. தேவிபட்டினம் கடலடைத்த பெருமாள் கோயில் சங்கல்ப மண்டபத்தில் சனிபெயர்ச்சி சிறப்புஹோமம் நடந்தது. பக்தர்கள் புனிதநீராடி, ஹோமத்தில் பங்கேற்று நவக்கிரகங்களை சுற்றிவந்து வழிபட்டனர்.
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் தனி சன்னதி கொண்ட சனிஸ்வர பகவானுக்கு சிவாச்சாரியார் நாகநாதன் தலைமையில், 18 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகவான் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோயில் நிர்வாக அலுவலர் சாமிநாததுரை, ஊராட்சி தலைவர் நாகராஜன், பேஷ்கார் சேகர், பிரதோஷ கமிட்டி தலைவர் ஸ்ரீதர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.