சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் விரதம் முடிக்க பக்தர்கள் முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2011 12:12
சோழவந்தான் :பெரியாறு அணை பிரச்னை காரணமாக சோழவந்தான் பக்தர்கள், இங்குள்ள ஐயப்பன் கோயிலில் விரதம் முடிக்க முடிவு செய்தனர். சோழவந்தான் அருகே தென்கரையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் டிச.27ல் நடக்கும் மண்டல பூஜையில் கலந்து கொண்டு விரதம் முடிக்க திட்டமிட்டிருந்தனர். தற்போது பெரியாறு அணை பிரச்னையில் கேரள செல்லும் பக்தர்களின் வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாவதால் தென்கரை பக்தர்கள் சபரிமலை செல்வதை கைவிட்டனர். தென்கரை ஐயப்பன் கோயிலில் விரதம் முடிக்க முடிவு செய்தனர். மண்டல பூஜை தினமான டிச.27ன் தென்கரை கோயிலுக்கு இரு முடிகளுடன் சென்று, மாலைகளை கழற்றி விரதம் முடிக்க உள்ளனர்.