மலையடியார சனீஸ்வரன் கோயிலில் சனி பெயர்ச்சி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2011 12:12
திண்டுக்கல் : சனி பெயர்ச்சியை முன்னிட்டு, திண்டுக்கல் மலையடியார சனீஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. விசேஷ அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் எள்தீபம் ஏற்றி வழிபட்டனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மலையடிவார சீனிவாச பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில்களில் ஆராதனைகள் நடந்தன. யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. தாடிக்கொம்புஅகரம் முத்தாலம்மன் கோயிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் மாரிமுத்து, அறங்காவலர்கள் ஏற்பாடுகளை செய்தனர். திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் கும்ப பூஜை, அபிஷேகம் நடந்தது. தக்கார் அறிவழகன், செயல் அலுவலர் பாலதண்டாயுதம் ஏற்பாடுகளை செய்தனர். திண்டுக்கல் நேருஜி நகர் நவசக்தி விநாயகர் கோயிலில் யாக பூஜைகள் நடந்தன.