பதிவு செய்த நாள்
19
ஜன
2018
12:01
மாமல்லபுரம் : சீரழிந்து வரும் ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகத்தை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்து கின்றனர். வைணவ சமய கோவில்கள், 108ல், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 63ம் கோவிலாக விளங்குகிறது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருடன் வீற்று, பக்தர்களுக்கு அருள்புரிகிறார். நிலத்தில் படுத்து காட்சி அளித்த இறைவனானதால், நிலம் சார்ந்த பரிகார கோவிலாக சிறப்புற்று விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன், கோவில் வளாகமும், அதன் சுற்றுப்புறமும், சமதளமாக இருந்தன. தற்போதோ, சுற்றுப்புறத்தில் கட்டடங்கள் பெருகி, நிலப்பகுதி, சாலைகள் உயர்ந்து, கோவில் வளாகம் தாழ்ந்துள்ளது. பாறைக்குன்றில் இருந்து பெருக்கெடுக்கும் மழைநீர், திருக்குளத்தை அடைவதற்கான வடிகால்வாய்கள் துார்க்கப்பட்டு உள்ளதால், வளாகத்தில் தண்ணீர் தேங்குகிறது. சமீபத்திய மழை நீர் வடியாமல், சேற்று சகதியில், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். அருகில் உள்ள பேருந்து நிலைய சுற்றுச்சுவர் இடிந்து, சிற்றுண்டி கடைகள் ஆக்கிரமித்து, அவற்றின் கழிவு நீர் வளாகத்தில் விடப்படு கிறது. அர்ச்சுனன் தபசு கலைச் சின்ன பகுதியில், இச்சீர்கேடு அவலத்தால், பயணி யர் அருவருக்கின்றனர். அறநிலையத் துறை நிர்வாகம், சீர்கேடுகளை தவிர்த்து இவ்வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.