Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் உற்சவர் சிலைகள் தொல்லியல், ’மாஜி’ இயக்குனர் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
01:01

காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, உற்சவர் சிலைகளை, நேற்று ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகவும், பஞ்சபூத தலங் களில் முதன்மையானதாவும் விளங்குகிறது.இந்த கோவிலில் உள்ள பழமையான உற்சவர் சிலை சிதிலம் மற்றும் அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாக கூறி, அறநிலையத் துறை உத்தரவின்படி, புதிய சிலையை செய்தனர்.

அந்த உற்சவர் சிலையில், தங்கம் கலந்திருப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பழைய மற்றும் புதிய சிலைகளை, நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இரு சிலைகளிலும் தங்கம் இல்லை என, அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மற்றும் போலீசார் முன்னிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, கோவிலில் உள்ள பழைய, புதிய உற்சவர் சிலைகளை ஒப்பிட்டு, நேற்று ஆய்வு செய்தார். உடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., சிவசங்கரன், கோவில் செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் இருந்தனர்.அதன் பின், பத்திரிகையாளர்களிடம் தொல்லியல் முன்னாள் இயக்குனர் கூறுகையில், ”பழைய சிலையின் பழமையை அறிய, நுண் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய சிலையில் தங்கம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்றார்.

கடந்த ஆண்டு, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்ற, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.அந்த சிலை, பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என, தெரிவித்தார். மேலும், பழைய சிலையை வழிபாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar