பதிவு செய்த நாள்
24
ஜன
2018
03:01
கரூர்: தைப் பூச விழாவை முன்னிட்டு, வெண்ணைமலை முருகன் கோவிலில், கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று இரவு முதல், காமதேனு வாகனம், பூத வாகனம், ஹம்ச வாகனம், மயில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஏழாம் நாளான தைப் பூசத்தன்று, திருக் கல்யாணம் நடக்க உள்ளது. இதையொட்டி, அன்று காலை, திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். ஆண்டுதோறும் கோவிலில், மாலையில் தேரோட்டம் நடக்கும். இந்த ஆண்டு, சந்திரகிரகணத்தை முன்னிட்டு, காலையிலேயே தேரோட்டம் நடக்க உள்ளது. அடுத்த நாள் காலை, சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். அன்றிரவு மயில் வாகனத்தில், சுவாமி வீதி உலா வந்த பின், விழா நிறைவடையும். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ராசாராம் மற்றும் பரம்பரை அறங்காவலர் சொக்கலிங்கம் ஆகியோர் செய்துள்ளனர்.