பதிவு செய்த நாள்
24
ஜன
2018
03:01
வால்பாறை:நடுமலை தெற்கு டிவிஷன், பூமாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன் பகுதியில், பூமாரியம்மன், காளியம்மன் திருக்கோவிலின், 58ம் ஆண்டு திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.காலை, 11:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நடந்த, அன்னதானம் வழங்கும் விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.