பதிவு செய்த நாள்
24
ஜன
2018
03:01
உடுமலை: உடுமலை, சக்திவிநாயகர் கோவிலில், சோடஷ லட்சுமி பூஜை நடந்தது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், அந்த ஆண்டு முழுவதும், வீட்டில் வளம் பெருகவும், லட்சுமியின் அருள் நிறைந்திருக்கவும் சுமங்கலிகள் மூலம் சோடஷ லட்சுமி பூஜை நடக்கிறது. உடுமலை, சக்தி விநாயகர் கோவிலில், இந்த ஆண்டுக்கான சோடஷ லட்சுமி பூஜை நேற்றுமுன்தினம் நடந்தது. மாலை, 4:00 மணி முதல், சுமங்கலி பெண்கள், லட்சுமி ஸ்தோத்திரங்கள் கூறி, விளக்கு பூஜை செய்தனர். லட்சுமிதேவியின் அருளைப்பெற பெண்கள் பலர் பூஜையில் பங்கேற்றனர்.
* உடுமலை, நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், தை மாதம் ரத சப்தமியையொட்டி பூமீ நீளா நாயகி சமேத சவுந்திரராஜ பெருமாளுக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தால் லட்சார்ச்சனை சிறப்பு பூஜை நேற்றுமுன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று லட்சார்ச்சனை, தீபாராதனை நடந்தது. இதில் இன்று காலை, 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, நித்ய திருவாராதனம், லட்சார்ச்சனை நிறைவு, திருமஞ்சனம், சந்தனக்காப்பு அலங்காரம், சர்வதரிசனம் போன்றவை இடம்பெறுகின்றன.