பதிவு செய்த நாள்
29
ஜன
2018
11:01
திருவாரூர்: முத்துப்பேட்டை அடுத்த, ஜாம்புவானோடை தர்கா கந்துாரி விழாவை ஒட்டி, சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில், ஆண்டுதோறும் கந்துாரி விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு, 716-வது கந்துாரி விழா, 18-ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலை சந்தன கூடு ஊர்வலம் நடந்தது.ஊர்வலம், அடக்க ஸ்தலம் சென்று, பின், ஆற்றங்கரை தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று, மீண்டும் ஜாம்புவானோடை தர்காவை, மூன்று முறை வலம் வந்தது. நேற்று அதிகாலை, 5:00 -மணிக்கு, சந்தன கூட்டில் இருந்து, சந்தன குடங்கள் எடுத்து வரப்பட்டு, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.