பதிவு செய்த நாள்
29
ஜன
2018
11:01
காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், பெரிய தம்பிரான் ஈஸ்வரன் மற்றும் வேத வன்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், திருவள்ளுவர் நகர், மிலிட்டரி சாலையில், பழமையான திரிபுரசுந்தரி உடனுறை பெரிய தம்பிரான் ஈஸ்வரன் மற்றும் வேத வன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, மாப்பிள்ளை விநாயகர், வினை தீர்க்கும் வேலவன், யோக குரு தட்சிணாமூர்த்தி, தவயோக கல்யாண துர்கை, பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, 26ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. கும்பாபிஷேக தினமான நேற்று காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், 8:00 மணிக்கு தம்பதிகள் மஹா சங்கல்பமும் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, வேத வன்னீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.