வால்பாறை : பாணலிங்க சிவசக்தி கணபதி திருக்கோவில் திருவிழாவில் நேற்று சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வால்பாறை அடுத்துள்ளது அப்பர்பாரளை - புதுத்தோட்டம். இங்குள்ள, அய்யன்முனீஸ்வரர், பாணலிங்க சிவசக்தி கணபதி திருக்கோவிலின், 59 ம் ஆண்டு திருவிழா கடந்த, 11 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து நடைபெறும் விழாவில் நேற்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டு, அய்யர்பாடி, கருமலை, பச்சமலை, நடுமலை, வால்பாறை நகர் வழியாக சோலையார் எஸ்டேட் பகுதிக்கு சென்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள் செய்திருந்தனர்.