பதிவு செய்த நாள்
29
ஜன
2018
12:01
பழநி:தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, பழநி முருகன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்தார்.வேளச்சேரி, எம்.எல்.ஏ.,வும், நடிகருமான வாகை சந்திரசேகர் இல்ல விழா பழநியில் நடக்கிறது. இதில் பங்கேற்க ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது சகோதரி ஜெயந்தியுடன் நேற்று வந்தார். அடிவாரம் திருஆவினன்குடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.பழநி மலைக் கோவிலுக்கு, ’ரோப்காரில்’ சென்று, இரவு, 8:20 மணிக்கு முருகன், போகர் சன்னதியில் தரிசனம் செய்தார். குடும்பத்தினர் பெயரில்அர்ச்சனை செய்து வழிபட்டார். பின், பத்திரிகையாளர்களை அழைத்த துர்கா, சகோதரி, செந்தில்குமார், எம்.எல்.ஏ., மனைவி அருள்மெர்சி, நிர்வாகிகளுடன், ’குரூப் போட்டோ’ எடுத்துக் கொண்டார்.