மதுரை: நாளை (ஜன.31) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும். புதன்கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும்.