சோமவார பிரதோஷம்: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2018 05:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது. இந்த திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி இந்த மூன்றும் ஒன்றாக வரும் அபூர்வ நாள். இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.