பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சோமாவாரம், திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி திதி என, மூன்றும் ஒன்றாக வந்த நேற்றைய தை மாத பிரதோஷம் அபூர்வமானது என்பதால், ஆயிரக்கணக்கானோர் நேற்று சிவன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில், ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள பிரதோஷ நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள அதிகார நந்தி உட்பட கோவிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஆறு நந்திகளுக்கு நேற்று, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை நடந்த அபி?ஷகத்தில், பன்னீர், மஞ்சள், பால், பழம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருட்களை கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர், கோவில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றைய பிரதோஷம் அபூர்வமானது என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிரிவலப்பாதையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் வேட்டவலத்தில் உள்ள பழமைவாய்ந்த அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு, அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இளையராஜா தரிசனம்: இசை அமைப்பாளர் இளையராஜாவிற்கு, மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை வந்த அவர், அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சென்று, விநாயகர், அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். அப்போது கோவில் குருக்கள் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினர்.