உடுமலை:உடுமலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான லட்சுமி ஹயக்ரீவர் பூஜை நடந்தது.உடுமலை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில், சிறந்தமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்கு சிறப்பு வழிபாடு நடந்தது.பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. லட்சுமி ஹயக்ரீவருக்கு, தேர்வுக்கான சிறப்பு வழிபாடு நடந்தது. பள்ளி மாணவர்கள், பெற்றோர், வழிபாட்டில் பங்கேற்றனர்.