பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
அன்னுார்:அ.மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.அ.மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் மற்றும் பட்டாளம்மன் கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. புதிய கோபுரம் அமைக்கப்பட்டு, விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, 27ம் தேதி காலையில் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. மாலையில்லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், காப்பு கட்டுதல், கோபுர கலசம் வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகியவை நடந்தது. 28ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. யாக சாலையிலிருந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் கோபுரத்துக்கும், மூலஸ்தானத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு, காலை 7:50 மணிக்கு மாகாளியம்மன் கோபுரத்துக்கும், மூலஸ் தானத்துக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
காலை 9:40 மணிக்கு பட்டாளம்மன் கோபுரத்துக்கும், மூலஸ்தானத்துக்கும், குருமூர்த்தி சிவம் தலைமையிலான சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். அவிநாசி வாகீசர் மடாதிபதி காமாட்சிதாச சாமிகள் அருளுரை வழங்கினார்.பின்னர் மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 4,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அச்சம்பாளையம், சண்முகம் குழுவினரின் நாம சங்கீர்த்தன இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.