பழநி: தைப்பூச திருவிழாவையொட்டி சென்னை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் இடும்பன்கோயில், பாதவிநாயகர் கோயில் உள்ளிட்ட இடங்களில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சில வாரங்களாக தேங்காய் வரத்து குறைந்து ரூ.10 முதல் ரூ.30 வரையும் விற்கப்படுகிறது. இதனால் தேங்காய் ஒன்று ரூ.40ஆகவும், அர்ச்சனை செட் ஒன்று ரூ.100 முதல் ரூ.150 வரையும் விற்கப்படுகிறது.