பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
சூலுார்: பள்ளபாளையம் ஆசிரமத்தில் நடந்த முப்பெரும் விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.சூலுார் அடுத்த பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், 72ம் ஆண்டு விழா, பரமஹம்சர் குரு பூஜை விழா மற்றும் விவேகானந்தா கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியின், 26வது ஆண்டு விழா நடந்தது. குரு பூஜை மற்றும் ஆண்டு விழாவின் முதல் நிகழ்வாக, ஆரத்தி மற்றும் ஊர்வலம் நடந்தது. ஆசிரம மாணவர்களின் பஜனை மற்றும் இசைநிகழ்ச்சி, கீதா பஜன் நடந்தது.பள்ளி ஆண்டு விழாவில், சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தாளாளர் சுவாமி ஆத்மானந்த மஹராஜ் தலைமை வகித்தார்; முதல்வர் வனிதாமணி வரவேற்றார். இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர் பேராசிரியர் கனகசபாபதி பேசுகையில், ”பெண்ணுக்கு கல்வி மிகவும் முக்கியம்.பெண் கல்வி கற்றால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும்.
”சுதந்திரப்போராட்ட தியாகிகள், ஆன்மிகம், சமுதாய ஒற்றுமைக்கு குடும்பத்தின் பங்களிப்பு குறித்து, இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவிக்க வேண்டும். நல்ல குடும்பங்கள் மூலம்தான் நல்ல சமுதாயம், நல்ல நாடு உருவாகும், ” என்றார். மாணவர்களின் கிருஷ்ணர் - குசேலர் நாடகம், முருகனின் பெருமை குறித்த நடனம், கோபிகைகளின் நடனம், கராத்தே பயிற்சிகள் நடந்தன.