அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்த வரகூர் காளியம்மன் கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2018 12:01
தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வரகூர் கிராமத்தில், காளியம்மன் மற்றும் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை தினத்தில் மிளகாய் யாகம் நடத்தப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்த கோவிலை, அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய இணை செயலாளர் தனக்கோட்டி என்பவர் நிர்வகித்து வந்தார். இவர் பக்தர்களிடம் அடாவடி செய்து பண வசூலிப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் புகார் சென்றது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவிலை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்டு, செயல் அலுவலர் கார்த்திகேயன் என்பவரை நியமித்தார்.