பதிவு செய்த நாள்
30
ஜன
2018
01:01
நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின்
நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது நாட்டுக்கு நாடு
வேறுபடும். அவ்வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுட்டுக்கொல்லப்பட்ட
ஜன., 30ம் தேதி, இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு, பலர் தங்களது
இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இதற்கு மதிப்பளிக்கும் விதமாகவும்
இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில், மகாத்மா
காந்தியின் பங்கு மகத்தானது. தொடக்கம் முதல் கடைசி வரை "அகிம்சை கொள்கையில்
இருந்து, அவர் விலகவே இல்லை. இவரது அகிம்சை கொள்கை, இந்தியாவில்
மட்டுமல்ல, உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சத்தியம் பேசுகிறார் தேசப்பிதா ..
*கீதையை வழிபடுவது கிளிப் பிள்ளை போல தினமும் படிப்பதன்று. அதன் உபதேசத்தைக் கடைபிடித்து வாழ்வது மட்டுமே.
*மறைந்த எந்த மனிதரையும் வணங்காமல் சத்தியத்தின் வடிவமான கடவுளை மட்டும் வணங்குவதே சரியான நெறிமுறை.
*பிரார்த்தனை என்பது வெறும் ஜெபமாலையை உருட்டுவது அல்ல. இதயப்பூர்வமானதாக இருப்பதே உண்மையான பிரார்த்தனை.
* பாவத்தை வெறுக்க வேண்டுமே ஒழிய பாவியை வெறுப்பது கூடாது. உலகில் வெறுப்பு என்னும் நஞ்சு பரவுவதற்கு வெறுப்பே காரணம்.
*
நற்செயல்களைப் புகழ்வதோடு, அதை செய்த நல்லவர்களை மதிப்போம். தீய செயல்களை
இகழ்வோம். ஆனால், அதைச் செய்தவர்கள் மீது இரக்கம் காட்டுவோம்.
*கடவுள் வழங்கிய ஆற்றலைப் பணம் தேட மட்டும் செலவு செய்யாதீர்கள். அதைக் கொண்டு மக்களுக்குத் தொண்டு செய்யுங்கள்.
*கடவுளை நம்பி நின்றால், பிறரால் எதிர்க்க முடியாத தைரியம் மனதில் பிறக்கும்.
*நியாயவழியில் செல்பவனுக்கு உதவி கிடைக்கும் என்பது நியதி. திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள்.
*உடம்பில் இருக்கும் பலத்தைக் காட்டிலும், மனதில் இருக்கும் பயத்தைப் போக்குவது தான் மிகப் பெரிய பலம்.
*கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அப்படி ஏதாவது பெற வேண்டுமானால் அவர் அன்பு நிறைந்தஇதயத்தை மட்டுமே
நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
*
பிரார்த்தனை காலையின் திறவுகோலாகவும், மாலையின் தாழ்ப்பாளாகவும்
இருக்கிறது. அதனால், ஒவ்வொருநாளும், பிரார்த்தனையில் தொடங்கி
பிரார்த்தனையில் முடிய வேண்டும்.
* நல்லெண்ணத்துடன் தொடங்கிய முயற்சி வீண் போவதில்லை. மனிதனின் பங்களிப்பு முயற்சியில் இருக்கிறது. அதன் பலனோ கடவுளின் கையில் உள்ளது.
*உணவு இல்லாமல் கூட மனிதன் உயிர் வாழ முடியும். ஆனால், பிரார்த்தனை இல்லாமல் அரை நிமிடம் கூட வாழ முடியாது.
*மனிதனிடம் உள்ள தீய குணங்களைப் போக்குவதற்கு பிரார்த்தனையை விடச் சிறந்த மார்க்கம் வேறில்லை.
*சிறு சிறு செயல்களில் கூட உண்மையாக நடப்பதுவே தூயவாழ்வு பெறுவதற்கான ரகசியம்.
*எண்ணத்தை
விட ஆற்றல் மிக்க பொருள் உலகில்கிடையாது. கடவுள் ஒருவரால் மட்டுமே
எண்ணத்தை அறிய முடியும். எப்போதும் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது
அவசியம்.
*அளவாக உண்ண வேண்டுமே யன்றி சுவைக்காக உண்பது கூடாது. ஆரோக்கியத்திற்காக மட்டும் உண்பது அவசியம்.
*உழைப்பு
இல்லாமல் சாப்பிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. உழைப் பவர் கைகளில் தான்
உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் ஒருபோதும் வாழ்வது கூடாது.
*கடவுளுக்கு எத்தனையோ பெயர் இருக்கின்றன. அதில், "சத்தியம் என்பது தான் மிகச் சிறந்த பெயர்.
*உண்மையும்,
அகிம்சையும் ஒருவனிடம் இருந்தால், தலைநிமிர்ந்து வாழ முடியும். அவனுடைய
முயற்சி அனைத்தும் வெற்றியாக முடியும். இதில் விதிவிலக்கே கிடையாது.
மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை