குன்னுார்: குன்னுாரில் புனித செபஸ்தியார் தேவாலய தேர்பவனி நடந்தது. குன்னுார் மவுன்ட் ரோட்டில், அமைந்துள்ள செபஸ்தியார் தேவாலயத்தின் திருவிழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. நாள்தோறும் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு ஆடம்பர திருநாள் திருப்பலி, பகல், 11:45 மணிக்கு அன்பின் விருந்து, மாலை, 4:30 மணிக்கு தமிழில் பாடல் திருப்பலி ஆகியவை நடந்தன. மாலை, 6:30 மணிக்கு புனிதரின் திருவுருவம் திருவீதி ஊர்வலம், நடந்தது. திவ்ய நற்கருணை ஆசிர் ஆகியவற்றுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜிஜோ வாத்தேலில் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.