திருப்பதியில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம்: அமைச்சர் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2018 11:01
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டிற்கு ஒருவர் ஒரு முறை மட்டுமே தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அமைச்சர் மணிக்கயால் ராவ் தெரிவித்துள்ளார். பா.ஜ., கட்சியை சேர்ந்த அமைச்சர் மணிக்கயால் ராவ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் : ‛‛ திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய பல சிபாரிசுக்கு வருவதால் ஒருவரே பல முறை தரிசனம் செய்கின்றனர். இதனால் ஏழை மக்கள் அதிக நேரம் காக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுகிறது. ஒருவர் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் கார்டு மூலம் தரிசனத்திற்கு அனுமதி பெறுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என பேட்டியளித்தார்.