பதிவு செய்த நாள்
01
பிப்
2018
01:02
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருகன்கோயில்களில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் வடக்குத்தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன., 29 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஜன.30 ல் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 7:30 மணிக்கு சுவாமியின் வீதியுலா நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனத்துடன் துவங்கியது. பின் மகா கணபதி ேஹாமம், சுப்பிரமணியர் ேஹாமம், துர்க்கா ேஹாமம், லட்சுமி, நவக்கிரக ேஹாமங்கள் நடந்தது. காலை 11:30 மணிக்கு பக்தர்கள் பால்குடம், காவடி பவனி வந்தது. பின் சுவாமிக்கு மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதியம் 3:45 க்கு மங்கள தீபாராதனையை தொடர்ந்து சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்பட்டது. குண்டுக்கரை சுவாமி நாத சுவாமி கோயிலில் காலை 6:30 மணிக்கு திருமஞ்சனம், விநாயகர் பூஜை நடந்தது. பக்தர்கள் சொக்கநாதசுவாமி கோயிலில் இருந்து பால்குடம், காவடி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். காலை 9:45 க்கு சுவாமிக்கு பால் அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. உற்சவ மூர்த்திக்கு மகா அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு சுவாமி உள் வீதியுலா நடந்தது. வழி விடு முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். சுவாமிக்கு மகா அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பரமக்குடி: பரமக்குடி சந்திரசேகரசுவாமி(ஈஸ்வரன்) கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ேஹாமம், ஜபம், கும்பஅபிேஷகம் நடந்தது. நேற்று காலை 8:00 மணி தொடங்கி பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரிக்குப்பின், சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்மன் தனியாக ரிஷப வாகனத்திலும், விநாயகர், முருகன், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தனர். பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை 8:00 மணிக்கு முருகன் சக்தி வேலுடன், மயில் வாகனத்தில் அலங்காரமாகிவீதியுலா வந்தார். தொடர்ந்து 10:00 மணி தொடங்கி மூலவரும் வள்ளி, தெய்வானைசமேத முருகனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனித்தேரில்ரிஷப வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.ஐந்து முனை ரோடு அருகில் உள்ள முருகன், முத்தாலம்மன் கோயில்வைகை ஆற்று படித்துறை செந்திலாண்டவர், பால்பண்ணை அருகில்உள்ள முருகன் என அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
நயினார்கோவில் நாகநாதசுவாமி காலை கோயிலில் இருந்து புறப்பாடாகி,மஞ்சக்கொல்லையில் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணிக்கு கோயில் திரும்பினார்.
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்களும்,தீபாராதனைகளும்நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் வெள்ளி கவசத்தில்காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவிபட்டினம்: விரதமிருந்த பக்தர்கள் கோட்டை முனீஸ்வரர் கோயிலில் இருந்து காவடி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பாலமுருகன் கோயிலை அடைந்து அபிேஷகம் செய்தனர்.