பதிவு செய்த நாள்
01
பிப்
2018
01:02
புதுச்சேரி : முதலியார்பேட்டையில் மறு சீரமைக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க ஞான சபை திறப்பு விழா நடந்தது. முதலியார்பேட்டை ஏ.எப்.டி., மில் அருகில் 1949ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அமைக்கப்பட்டது. 69 ஆண்டுகள் பழமைவாய்ந்த இச்சபை புதிதாக மறு சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட ஞானசபையின் திறப்பு விழா நேற்று நடந்தது. சபையின் நிர்வாகி கோபி (எ) கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேல் நமச்சிவாயம், புஷ்பலதா, சஜிதா கோபாலகிருஷ்ணன், ராஜாராம், தையல்நாயகி, கணபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். காலை 5:00 மணிக்கு திருஅகவல் உணர்ந்தோதுதல், காலை 7:00 மணிக்கு சுத்த சன்மார்க்க நீதிக் கொடி உயர்த்துதல் மற்றும் புதிய சத்திய ஞான சபையை திறந்து வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மறுசீரமைக்கப்பட்ட ஞானசபையை திருக்கண்டீசுவரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோக சாலை சாது சிவராமனார் திறந்து வைத்தார். அரும்பார்த்தபுரம் சங்க அருணாச்சலம் தலைமை தாங்கினார். தட்டாஞ்சாவடி கணேசன், அரங்கனுார் சங்க தலைவர் குஞ்சிதபாதம், தலைமை சங்க தலைவர் கணேசன், கொருக்குமேடு சங்கம் மனோகரன் முன்னிலை வகித்தனர். காலை 8:00 மணி மற்றும் இரவு 7:00 மணி ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. காலை 9:45 மணிக்கு, திருவருட்பா இசை நடனமும், பரதநாட்டியம் நிகழ்ச்சி, காலை 10:30 மணிக்கு திருவருட்பா சிறப்பு சொற்பொழிவு நடந்தது.