மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலுக்கு, பக்தர்கள் பாதயாத்திரையாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். காரமடை அருகே, குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூசத் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து, நேற்று பெரிய மத்தம்பாளையத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி மற்றும் பால் குடங்களுடன், பாத யாத்திரையாக குருந்தமலை கோவிலுக்கு வந்தனர். பால் அபிேஷகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.