பதிவு செய்த நாள்
03
பிப்
2018
01:02
கொடுமுடி: நிலாச்சோறு திருவிழா நிறைவு பெற்றது. பெண்கள் கும்மியடித்து, வழிபாடு செய்தனர். ஈரோடு மாவட்டத்தில், பல இடங்களில், தைப்பூசத்துக்கு ஒரு வார காலம் முன், பெண்கள் நிலாச்சோறு படைத்து, இரவில் வழிபாடு செய்வது வழக்கம். நடப்பாண்டும் இந்த விழா, வழக்கம்போல் கொண்டாடப்பட்டது. கொடுமுடி, சிவகிரி பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், ஒன்று கூடி வழிபாடு நடத்தினர். நிறைவு நாளான நேற்று முன்தினம், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப்பாடி, வழிபாடு நடத்தி நிறைவு செய்தனர்.