பதிவு செய்த நாள்
03
பிப்
2018
01:02
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த, மதகொண்டப்பள்ளியில் நடந்த, பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மதகொண்டப்பள்ளியில், பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. தேர்த்திருவிழா கடந்த, 24 ல் துவங்கியது. அன்று மாலை, 4:30 மணிக்கு ரதசப்தமி உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபி?ஷக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு கல்யாண உற்சவம், காலை, 10:30 மணிக்கு கருடோற்சவம், மாலையில் உடடோற்சவம், இரவு கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று மதியம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனர். தேரின் மீது வாழைப்பழம், உப்பு, மிளகு போன்றவற்றை போட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று இரவு பல்லக்கு உற்சவம், நாளை இரவு ஊஞ்சல் உற்சவம், ஹம்சவாகனோற்சவம், 5 காலை கருடோற்சவம், 6 காலை புஷ்போற்சவம், 7 காலை சயனோற்சவம், 8 காலை சுப்ரபாத சேவை, மகா அபி ?ஷகம், விஸ்வரூப சேவை மற்றும் 9 ல் வசந்தோற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.