பதிவு செய்த நாள்
03
பிப்
2018
01:02
கொடுமுடி: கொடுமுடி, ஊஞ்சலூர் கொளத்துப்பாளையத்தில் விநாயகர், மகா மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும், 5ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று குபேர மகாலட்சுமி யாக வேள்வி, காவிரிக்கு சென்று புனித நீர் கொண்டு வருதல், முதற்கால யாக பூஜை நடக்கிறது. நாளை வேத பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, சுவாமி மூலஸ்தானம் எண்வகை மருந்து சாற்றுதல் நடக்கிறது. பிப்.,5ல் காலை, 9:00 மணியில் இருந்து, 10:20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, திருப்பணி குழு கமிட்டி தலைவர் அமராவதி புதூர் சேகர், செயலாளர் அருண், பொருளாளர் வாசுதேவன், ஊர் மக்கள் செய்கின்றனர்.